July 25, 2010

சுதந்திரம் ...

The Cause is in my Will
சுதந்திரம் என்பது எளிதல்ல. சுதந்திரமாக இருக்கும் மனிதன் தனது முடிவுகள், செயல்கள், நம்பிக்கைகள் எல்லாம் தன் சுதந்திரத்தில் உருவானது என்று கருதுகிறான். பிறர் சொல்லுவதை கேட்டு நடக்கும் போது, அப்படி கேட்பது தன் முழு சுதந்திரத்தில் எடுத்த முடிவு என்று கருதுகிறான். அவன் பிறர் சொல்லியதை கேட்டு தவறு விளையும் போது கூட, "பிறர் சொன்னாலும் எனக்கெங்கே புத்தி போனது?" என்று தானே தனது செயல்களின் விளைவுகளுக்கு முழு பொறுப்பேற்கின்றான். ஏனென்றால் அனைத்து செயல்களும் தன் சுதந்திர எண்ணங்களால் விளைந்தவை என்று கருதுகிறான். கல்யாணத்தின் ஒரு பெரிய வசதியே தவறாகும் விளைவுகளுக்கு எல்லாம் நம் துணை தான் காரணம் என்பது போல் துணையை ஒரு லுக் விட்டுட்டு நம் மேல் ஒரு தவறும் இல்லை என்பது போல் அடுத்த விசயத்துக்கு போயிடலாம். உண்மையிலே சுதந்திரமாக உள்ள மனிதன் அப்படி தப்பிக்க முடியாது. விளைவுகளுக்கு பிறரை அல்லது சூழ்நிலையை பழிக்கும் மனிதன், பிறருக்கு மற்றும் சூழ்நிலைக்கு அடிமையே.

No comments:

Post a Comment