September 06, 2008
ஆசை, தோசை, அப்பளம், வடை
இன்று கமலின் காதலா காதலா படம் பார்த்தேன். ஏற்கனவே சில முறை பார்த்த படம் என்றாலும் கூட, கமலின் நகைச்சுவை படங்களை திரும்ப திரும்ப பார்ப்பதில் எனக்கு ஏனோ அலுப்பு தட்டுவது இல்லை. அதில் தொடக்கத்தில் ஒரு காட்சி வரும். "ஆனந்த விகடானந்தா" என்றொரு சாமியார் வருவார்.
சாமியாரின் பக்தர் கூட்டத்தினால் எற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிய சௌந்தர்யா, அந்த சாமியாரின் பேச்சை கேட்கும்படி நேரிடும். அவரை கபடானந்தா என்று கிண்டல் செய்த சௌந்தர்யா, விகடானந்தா முடமாக இருக்கும் கமலை நடக்க வைப்பதை பார்த்து, விகடானந்தா பக்தை ஆக மாறி விடுவார்.
விகடானந்தா பின் தன் பக்தர்களிடம் சொற்பொழிவு ஆற்றுவார். அந்த காலத்தில் பெரியவர்கள் மூவாசையினை அடக்க சொன்னார்கள், ஆனால் அது பத்தாது நாவாசையினை அடக்க வேண்டும் என்பார் விகடானந்தா. தோசை நிறைய சாப்பிட்டால் வயிறு கெட்டு போயிடும், அதே மாதிரி தான் அப்பளம் மற்றும் வடை. இதனால் தான் நம் முன்னோர்கள் சிறு குழந்தைகளுக்கும் புரியும் விதமாக "ஆசை, தோசை, அப்பளம், வடை" என்றார்கள் என்று சொல்லும் விகடானந்தா, இதுவே தன் பக்தர்களுக்கு தான் சொல்லிகொடுக்கும் தாரக மந்திரம் என்பார். விகடானந்தா சொல்ல சொல்ல பக்த கோடிகளும் அவர் பின்னால் "ஆசை, தோசை, அப்பளம், வடை" என்ற தாரக மந்திரம் முழங்குவார்கள்.
தாரக மந்திரம் "ஆசை, தோசை, அப்பளம், வடை" என்பதால் இதை பார்க்கும் போது நமக்கு சிரிப்பாக இருக்கும். ஆனால் விகடானந்தா இந்த தாரக மந்திரத்தினை சமஸ்கிருதத்தினில் சொல்வதாக வைத்து கொள்ளவோம். "ஆசை, தோசை, அப்பளம், வடை" க்கு சமஸ்கிருதத்தில் மொழி பெயர்ப்பு எனக்கு தெரியாது. ஆனால் "லோபா, சகாரா, தயம்மா, பிரட்னிவிஷா" என்று மந்திரம் சொல்லி கொடுத்தால் யாருக்கு என்ன தெரியும்?
மற்றவர்களை பற்றி எனக்கு தெரியாது. ஆனால் இந்த மாதிரி கூட்டத்தில் கோவிந்தா போடும் ஆள் தான் நான். கடவுள், சாமியார் இந்த மாதிரி விசயங்களில் ஏன் வம்பு என்று நினைக்கும் சாதாரண மனிதன் நான்.
இலகுவாக நொறுங்கும் பொருளாக இருக்கும் வாழ்க்கையில் இவ்வளவு அழகிய என் தங்கங்களை பத்திரமாக கூட்டிச் செல்வதில் இருக்கும் பயம் என்று நினைக்கிறேன்.
August 31, 2008
புது தொடக்கம் (Clean Slate)
இது அனேகமாக எனது இருநூறாவது புது தொடக்கமாக இருக்க வேண்டும். இருந்தாலூம் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன், வேதாளைத்தினை முருங்கை மரத்தினில் இருந்து எடுத்து கொண்டு சற்று வேகமாகவே நடக்க ஆரம்பித்தான்.
புது தொடக்கங்களில் நேற்று என்பதற்கு பெரிய அர்த்தம் இல்லை. ஒரு பாடம் என்பதை தவிர. இன்று கையில் உள்ள பொருள்கள் மட்டுமே கணக்கு. இன்று என்று பார்க்கும் போது நான் சாப்பாடு பழக்கங்களை சற்று கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். சாப்பாடு விஷயத்தில் வாழைப் பழ தோட்டத்தில் புகுந்த யானை போல் இருக்கின்றேன். லீலா சமையல் பண்ணும் போது எல்லாம் சாப்பிடுவது வரம்பு மீறி விடுகிறது. பழைய படி சமையல்கார அம்மாவையே சமையல் செய்ய சொல்ல வேண்டும்.
செப்டம்பரை பிள்ளையார் சுழி போட்டு ஸ்டார்ஸ் கணக்கு தொடங்க வேண்டும். எத்தனை தடவை சாமி ஆடினாலும், ஏன் தான் எனக்கு புத்தி வர மாட்டேங்குதோ? பைத்தியம் ஏன் பிடிக்கின்றது? ம்ம்ம்ம் விக்கிரமாதித்தன் போலே மீண்டும் தொடர வேண்டியது தான்.
நாளை ஒரு புதிய நாள் .
ஓவர் சாப்பாடு
இன்று காலையிலே கொஞ்சம் ஓவர் தான் சாப்பாடு. 8 இட்லி, 2 பிளேட் மட்டன் பிரியாணி. அதுவே கொஞ்சம் மயக்கம் தான். சாப்பிட்டு விட்டு பேசாமல் 2 மணி நேரம் படுத்து விட்டேன். மத்தியானம் எழுந்தவுடன் இன்னும் கொஞ்சம் பிரியாணி, சிக்கன் . இப்ப கண்ணு எல்லாம் ஒரே எரிச்சலா இருக்கு.
இப்படி கண்ணு மண்ணு தெரியாம சாப்பிட்டா, என்ன தான் ஆகுமோ?
இப்படி சாப்பிட்டு விட்டு எடுத்த போட்டோ தான் இது :
August 30, 2008
Trial and Error --- Why this blog?
Old Photos helps us recall a moment from the past.
This blog is like a photograph of my present thinking process.
Why do I write anyway?
Am I afraid that my mind would die someday?
And I want to keep a copy of my mind's construction?
Or maybe getting my thinking into written sentences brings clarity to my mind.
This blog is like a photograph of my present thinking process.
Why do I write anyway?
Am I afraid that my mind would die someday?
And I want to keep a copy of my mind's construction?
Or maybe getting my thinking into written sentences brings clarity to my mind.
Subscribe to:
Posts (Atom)