September 06, 2008
ஆசை, தோசை, அப்பளம், வடை
இன்று கமலின் காதலா காதலா படம் பார்த்தேன். ஏற்கனவே சில முறை பார்த்த படம் என்றாலும் கூட, கமலின் நகைச்சுவை படங்களை திரும்ப திரும்ப பார்ப்பதில் எனக்கு ஏனோ அலுப்பு தட்டுவது இல்லை. அதில் தொடக்கத்தில் ஒரு காட்சி வரும். "ஆனந்த விகடானந்தா" என்றொரு சாமியார் வருவார்.
சாமியாரின் பக்தர் கூட்டத்தினால் எற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிய சௌந்தர்யா, அந்த சாமியாரின் பேச்சை கேட்கும்படி நேரிடும். அவரை கபடானந்தா என்று கிண்டல் செய்த சௌந்தர்யா, விகடானந்தா முடமாக இருக்கும் கமலை நடக்க வைப்பதை பார்த்து, விகடானந்தா பக்தை ஆக மாறி விடுவார்.
விகடானந்தா பின் தன் பக்தர்களிடம் சொற்பொழிவு ஆற்றுவார். அந்த காலத்தில் பெரியவர்கள் மூவாசையினை அடக்க சொன்னார்கள், ஆனால் அது பத்தாது நாவாசையினை அடக்க வேண்டும் என்பார் விகடானந்தா. தோசை நிறைய சாப்பிட்டால் வயிறு கெட்டு போயிடும், அதே மாதிரி தான் அப்பளம் மற்றும் வடை. இதனால் தான் நம் முன்னோர்கள் சிறு குழந்தைகளுக்கும் புரியும் விதமாக "ஆசை, தோசை, அப்பளம், வடை" என்றார்கள் என்று சொல்லும் விகடானந்தா, இதுவே தன் பக்தர்களுக்கு தான் சொல்லிகொடுக்கும் தாரக மந்திரம் என்பார். விகடானந்தா சொல்ல சொல்ல பக்த கோடிகளும் அவர் பின்னால் "ஆசை, தோசை, அப்பளம், வடை" என்ற தாரக மந்திரம் முழங்குவார்கள்.
தாரக மந்திரம் "ஆசை, தோசை, அப்பளம், வடை" என்பதால் இதை பார்க்கும் போது நமக்கு சிரிப்பாக இருக்கும். ஆனால் விகடானந்தா இந்த தாரக மந்திரத்தினை சமஸ்கிருதத்தினில் சொல்வதாக வைத்து கொள்ளவோம். "ஆசை, தோசை, அப்பளம், வடை" க்கு சமஸ்கிருதத்தில் மொழி பெயர்ப்பு எனக்கு தெரியாது. ஆனால் "லோபா, சகாரா, தயம்மா, பிரட்னிவிஷா" என்று மந்திரம் சொல்லி கொடுத்தால் யாருக்கு என்ன தெரியும்?
மற்றவர்களை பற்றி எனக்கு தெரியாது. ஆனால் இந்த மாதிரி கூட்டத்தில் கோவிந்தா போடும் ஆள் தான் நான். கடவுள், சாமியார் இந்த மாதிரி விசயங்களில் ஏன் வம்பு என்று நினைக்கும் சாதாரண மனிதன் நான்.
இலகுவாக நொறுங்கும் பொருளாக இருக்கும் வாழ்க்கையில் இவ்வளவு அழகிய என் தங்கங்களை பத்திரமாக கூட்டிச் செல்வதில் இருக்கும் பயம் என்று நினைக்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)